நுரைச்சோலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கடலில் விழுந்து மாயம்
Prathees
2 years ago

நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலைய ஊழியர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் கனிஷ்ட தொழில்நுட்ப உதவியாளரான ஹர்ஷ ஹேமந்த பிரியசாத் என்பவரே இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளார்.
மின்வாரிய ஜெட்டியில் இருந்து கடலில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அவரது சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர் சடலத்தைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.



