பயனாளர்களின் தரவுகளை “அனுமதியின்றி பயன்படுத்தும் 2 நிறுவனங்களுக்கு 572 கோடி அபராதம்
Prasu
2 years ago
அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களாக கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்கள் இருக்கிறது. இந்த நிறுவனங்கள் தென்கொரியா செல்போன் சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் இந்த நிறுவனங்கள் விளம்பர நோக்கங்களுக்காக தங்களது பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை விசாரித்த தென் கொரிய அரசின் தனிநபர் தகவல் மற்றும் பாதுகாப்பு ஆணையம் கூகுளுக்கு 398 கோடியும், மெட்டாவுக்கு 175 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
தென்கொரியாவில் கூகுளை பயன்படுத்தும் 82 சதவீதத்தினருக்கும், மெட்டாவை பயன்படுத்தும் 98 சதவீதத்தினருக்கும் தங்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிவது பற்றி எந்த ஒரு தகவலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



