எலிசபெத் மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்களது வரிசை 16 கிலோ மீற்றர் அளவில் நீண்டு காணப்படுகின்து
Kanimoli
2 years ago

பிரித்தானிய எலிசபெத் மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்தொகையான மக்கள் குவிந்துள்ளனர். இவ்வாறு வந்த மக்களது வரிசை 16 கிலோ மீற்றர் அளவில் நீண்டு காணப்படுகின்றதாக கூறப்படுகின்றது.
வெளிநாடுகளிலிருந்து வந்த மக்களைப் போலவே குழந்தைகள் மற்றும் பல்வேறு மாற்றுத்திறனாளிகளும் இரவு பகல் பாராது மகா ராணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரிசையில் காத்திருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
மகாராணியின் உடல் லண்டனிலுள்ள வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்துக்கு எடுத்து வரப்பட்ட பின்னர் அரச குடும்பத்தைச் சேர்ந்த சகலரும் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருகை தந்திருந்தனர்.
இதில் பலர் கண்ணீர் சிந்தியபடி மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருந்தனர்.



