அனைத்து மாணவர்களுக்கும் 13 மணிநேர பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க பல்கலைக்கழக அதிகாரசபை தீர்மானம்
Kanimoli
2 years ago

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணிநேர பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க பல்கலைக்கழக ஆளும் அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவர் ஒரு மணித்தியால வேலைக்காக 350 ரூபா பெற்றுக்கொள்வார்.
பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா சேவைகளை வழங்குவதற்கும், இணையம் மூலம் அறிவுப் பரிமாற்றம் செய்வதற்கும் தற்காலிக வேலைவாய்ப்பு நியமனம் வழங்கப்படும் என துணைவேந்தர் தெரிவித்தார்.
அதேவேளை இலங்கையிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் முதன்முறையாக இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



