இன்று முதல் கொழும்பு தாமரை கோபுரம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுதுள்ளது
Kanimoli
2 years ago

இன்று முதல் கொழும்பு தாமரை கோபுரம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுதுள்ளது.
இதற்கமைய இன்று முதல் நாட்டு மக்கள் அனைவரும் தாமரை கோபுரத்தினை சென்று தரை தளத்தில் அனுமதி சீட்டினை பெற்று பார்வையிட முடியும்.
அதன்படி 10 வயதிற்கு குறைந்தவர்களுக்கு 200 ரூபா முதல் 500 ரூபா வரையிலும், ஏனையவர்களுக்கு 500 ரூபா முதல் 2000 ரூபா வரையிலும் அனுமதி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.
அதேவேளை தெற்காசியாவிலேயே மிக உயரமாக இத் தாமரைகோபுர சீனாவின் உதவியுடன் 113 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 300 மீற்றர் உயர கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



