இலங்கையில் இருந்து சீனா சென்ற நபருக்கு கொவிட் தொற்று - ஷாங்காய் சுகாதார ஆணைக்குழு

#SriLanka #China #Covid 19
Prasu
2 years ago
இலங்கையில் இருந்து சீனா சென்ற நபருக்கு கொவிட் தொற்று - ஷாங்காய் சுகாதார ஆணைக்குழு

இலங்கையில் இருந்து சீனாவுக்கு சென்ற சீன பிரஜை ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஷங்காய் (சீனா) சுகாதார ஆணைக்குழு வியாழக்கிழமை காலை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் 8 பேருக்கு கொவிட் தொற்று செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு இலங்கையரும் அடங்குவதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சீனப் பிரஜை இலங்கையிலிருந்து செப்டம்பர் 10 ஆம் திகதி ஷங்காய் புடோங் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய தொற்றாளர்கள் நியூசிலாந்து, அமெரிக்கா, தென் கொரியா மற்றும் கனடாவில் இருந்து சீனாவுக்கு வந்துள்ளனர்.

அனைத்து தொற்றாளர்களும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்கள்.

அதே நேரத்தில் அவர்களுடன் அதே விமானங்களில் நெருங்கிய தொடர்பு கொண்ட 32 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!