பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் போதைப்பொருள் வர்த்தகர் வெலே சுதா
#SriLanka
#drugs
#Arrest
Prasu
2 years ago
போதைப்பொருள் வர்த்தகரான கம்பளை விதானாகே சமன்த குமார எனும் "வெலே சுதா" உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது, குற்றம்சாட்டப்பட்ட "வெலே சுதா" பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள வெலே சுதாவின் மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
அதன்பின், குறித்த வழக்கை டிசம்பர் 5 ஆம் திகதி விசாரணையை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.



