கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்திலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு

Kanimoli
2 years ago
கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்திலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு

கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்திலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

தலைமன்னாரில் இருந்து இன்று (15.09.2022) காலை 8.30 மணிக்கு கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த அரச பேருந்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

எனினும் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரியவருகிறது.

பல இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்
பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 250 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போதைப்பொருள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!