ஒன்பது பில்லியன் யூரோக்களை இராணுவம் அல்லாத நிதியுதவியாக உக்ரைனுக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

#European union #Ukraine
Prasu
2 years ago
ஒன்பது பில்லியன் யூரோக்களை இராணுவம் அல்லாத நிதியுதவியாக உக்ரைனுக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்ய தொடங்கிய போரானது 6 மாதங்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏற்கனவே அனுப்பப்பட்ட பில்லியன் கணக்கான யூரோக்களை சேர்த்து, ராணுவ செலவினங்களுக்காக கூடுதலாக பணம் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதாக முகாமின் ராஜதந்திர தலைவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “சமீபத்திய நாட்களில், உக்ரைனிய ராணுவ படைகள் அதிநவீன மேற்கத்திய ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகளுடன் ஆயுதம் ஏந்திய ரஷ்ய படைகளை நாட்டின் கிழக்குப் பகுதியில் அவசரமாக பின்வாங்கச் செய்தன. 

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் கூடுதலாக ஒன்பது பில்லியன் யூரோக்களை இராணுவம் அல்லாத நிதியுதவியாக உக்ரைனுக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதில் ஒரு பில்லியன் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது, மற்றொரு ஐந்து பில்லியன் யூரோக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் நிலுவையில் உள்ள மூன்று பில்லியன் யூரோக்கள் உறுப்பு நாடுகளின் ஒப்புதலைப் பொறுத்தது” என்று அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!