அறகலயா செயற்பாட்டாளர்களை கைது செய்வது குறித்து கவலை தெரிவித்துள்ள பழங்குடியின சமூகத்தின் தலைவர்
Prasu
2 years ago

அரகலய போராட்ட இயக்கத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தடுத்து வைத்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதைக்கு உள்ளாக்குவது வருந்தத்தக்கது என இலங்கையின் பழங்குடியின (வேதா) சமூகத்தின் தலைவர் உரு வாரியே வன்னில அத்தோ தெரிவித்துள்ளார்.
தம்பன, கொட்டபாகினிய கிராமத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய உருவரிகே வன்னில அத்தோ, ‘அறகலய போராட்ட இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளரான வசந்த முதலிகேவை தடுத்துவைத்துள்ளமை குறித்து மீள்பரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
ஏதேனும் குற்றம் இழைக்கப்பட்டிருந்தால், தகுந்த தண்டனையை வழங்குவது நியாயமானது, ஆனால் அவர்களை நீண்ட காலம் தடுத்து வைத்து, உடல் மற்றும் மனரீதியான சித்திரவதைகளுக்கு உட்படுத்துவது பொருத்தமானதல்ல என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.



