இலங்கை அரசின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம்
Mayoorikka
3 years ago
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனிவாவில் இலங்கையர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக் காரர்களை விடுவிக்குமாறு கோரி ஜெனிவாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.