ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

Mayoorikka
2 years ago
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது

இதேவேளைஇ ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் ஏற்கனவே ஜெனிவா சென்று அங்கு கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான்இ காவிந்த ஜயவர்தன மற்றும் சட்டத்தரணி எரந்த வெலியங்கே ஆகியோர் ஜெனிவா சென்றுள்ளனர்.

மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக இலங்கையில் இருந்து தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் நேற்று ஜெனிவா சென்றடைந்துள்ளனர்.
இந்த அமர்வில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் இந்த வாரம் பகிரங்கப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பான உத்தேச தீரமானம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை பிரதிபலிக்கும் என கூறப்படுகின்றது. இதன் முதல் அல்லது பூச்சிய வரைவு இன்று அல்லது நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உத்தேச தீர்மானம், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள், போர் குற்றங்கள் தொடர்பில் 2012ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படாத முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளுடன், இலங்கை குடிமக்களின் உரிமைகள் மீறல் தண்டனை இன்மையால் இடம்பெற்ற பொருளாதார குற்றங்கள் தொடர்பான விடயங்கள் உள்ளடங்கியிருக்கலாம் என
கூறப்படுகின்றது. மேலும், இனப் பிரச்சினைக்கு தீர்வு காணாமை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்மை, ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படல், துஷ்பிரயோகம் செய்யப்படல், அவசரகால மற்றும் பயங்கரவாத சட்டங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கத் தவறியமை போன்றவையும் பகுதிகளாக இருக்கும். 

புதிய தீர்மானம் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மலாவி நாடுகளால் அனுசரணை செய்யப்படவுள்ளது. இதனிடையே, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முறைசாரா அமர்வுகள் ஆரம்பமாகும்.

அங்கும் இந்த வரைவு விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!