சந்தைகளில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தைகளில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிய வருகின்றது.
இதன்படி, ஒரு கிலோகிராம் போஞ்சி 600 ரூபாவுக்கும், கரட் ஒரு கிலோ 400 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 800 ரூபாவுக்கும் கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 400 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும், வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம் வெள்ளரிக்காய், பீர்க்கங்காய் மற்றும் மரவள்ளிக்கிழங்கு என்பவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதுதவிர, கடந்த போகத்துடன் ஒப்பிடும் போது, பெரிய வெங்காய பயிர்ச்செய்கைக்கு பாரிய செலவீனத்தை ஏற்க வேண்டியுள்ளதாக பெரிய வெங்காய பயிர்ச்செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்காரணமாக அதன் அறுவடை குறைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மீதமாகும் அறுவடை காரணமாக சாதாரண விலையை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்
கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தங்களது விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்த விலை அதிகரிப்பு காரணமாக விவசாயிகளுடன், சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.



