அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
Kanimoli
3 years ago
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைப்பெற்றுள்ளன.
அத்பர் செயலகத்தில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள், நெல் கொள்வனவு மற்றும் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு போன்ற முக்கிய காரணிகள் குறித்து இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முக்கியமான விடயங்கள் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர்களை தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்திற்கு பின்னர் நடைபெறும் முதலாவது அமைச்சரவை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.