இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் தேயிலை ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளது

Prathees
2 years ago
இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் தேயிலை ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளது

இந்த வருடத்தின் (2022) முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருமானம் 9.2 வீதத்தால் 694.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டு (2021) முதல் ஏழு மாதங்களில் பதிவான தேயிலை ஏற்றுமதி வருமானம் 765.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

தேயிலை ஏற்றுமதியையும் உள்ளடக்கிய மொத்த விவசாய ஏற்றுமதி வருமானமும் இந்த வருடத்தின் (2022) முதல் ஏழு மாதங்களில் 4.7 சதவீதம் குறைந்து 1454.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இவ்வருடத்தின் (2022) முதல் ஏழு மாதங்களில் இறப்பர் ஏற்றுமதி வருமானம் 11.3 வீதத்தாலும், தேங்காய் ஏற்றுமதி வருமானம் 5.1 வீதத்தாலும் வளர்ச்சியடைந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!