போதைப்பொருள் சோதனைக்கு சென்ற 04 பொலிஸார் மீது கும்பல் தாக்குதல்

போதைப்பொருள் சோதனைக்கு சென்ற புத்தளம் பிரிவு விஷ போதைப்பொருள் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் 4 பேர் மீது கடந்த 10ஆம் திகதி இரவு ஆனமடுவ கொட்டுகச்சிய பூரணகம பிரதேசத்தில் ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்று மாலை முதல் கொட்டுகச்சிய பிரதேசத்தில் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு மோட்டார் சைக்கிள்களில் அழைத்துச் செல்லும் போது வீதியில் நின்றிருந்த இளைஞர்கள் சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர்இ சந்தேகத்திற்கிடமான இந்த இளைஞர்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளை இரும்பு கம்பிகள் மற்றும் மரக்கட்டைகளால் கொடூரமாக தாக்கினர்.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர்களை 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவை மூலம் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பிரதேச மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.



