நியூசிலாந்தில் படகு ஒன்று திமிங்கிலத்தின் மீது மோதியதில் விபத்துக்குள்ளாகி ஐந்து நபர்கள் மரணம்

Prasu
2 years ago
நியூசிலாந்தில் படகு ஒன்று திமிங்கிலத்தின் மீது மோதியதில் விபத்துக்குள்ளாகி ஐந்து நபர்கள் மரணம்

நியூசிலாந்தில் உள்ள கோஸ் பே என்னும் பகுதியில் இருக்கும் கடலில் சிறிய வகை படகு ஒன்றில் நேற்று 11 நபர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பறவை ஆர்வலர்கள். அப்போது அந்த படகின் மீது திடீரென்று ஒரு பெரிய திமிங்கலம் வந்து மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த படகு நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டது.

இது பற்றி கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் மீட்பு பணியை மேற்கொண்டனர். 11 பேரில் ஆறு பேரை மீட்டு விட்டார்கள். எனினும், மீதமிருந்த ஐந்து பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!