23 ஆயிரம் இந்திய மாணவர்கள் சீன பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு விண்ணப்பம் பதிவு

Prasu
2 years ago
23 ஆயிரம் இந்திய மாணவர்கள் சீன பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு விண்ணப்பம் பதிவு

இந்தியாவில் இருந்து சீனாவுக்கு சென்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் படித்தார்கள். ஆனால் கொரோனா காரணமாக நாடு திரும்பிய அவர்கள் விசா தடை காரணமாக வீடுகளில் முடங்கி உள்ளனர். 

இந்தநிலையில் தற்போது 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் சீன பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு பதிவு செய்து கொண்டுள்ளனர். 

அவர்களில் பெரும்பாலோர் மருத்துவம் படிக்க விரும்புகின்றனர். 2 ஆண்டு விசா தடைக்கு பின்னர் இப்போதுதான் சீனா குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு, அங்கு வருவதற்கு விசா வழங்க தொடங்கி உள்ளது. 

ஆனால் அவர்களில் பலரும் நேரடி விமான சேவையின்றி தவிக்கின்றனர். இதையொட்டி இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை இன்னும் நீடிக்கிறது. 

இதற்கு மத்தியில் சீன மருத்துவ கல்லூரிகள் இந்தியா உள்ளிட்ட பிற மாணவர்களை மருத்துவ படிப்புக்காக பதிவு செய்யத்தொடங்கி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!