பேருந்து- எரிபொருள் டேங்கர் மோதி பயங்கர விபத்து: தீயில் கருகி 18 பேர் மரணம்

#Mexico #Accident #Death
Prasu
2 years ago
பேருந்து- எரிபொருள் டேங்கர் மோதி பயங்கர விபத்து: தீயில் கருகி 18 பேர் மரணம்

வடக்கு மெக்சிகோவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், டேங்கர் லாரி வெடித்து தீ பிடித்துக்கொண்டது. தீ மளமளவென பரவி பேருந்தும் தீ பற்றி ஏரிந்தது. இந்த கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 

வடக்கு எல்லை மாநிலமான தமௌலிபாஸில் மான்டேரிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் விடியற்காலையில் நடந்த இந்த விபத்தில் சிக்கிய மேலும் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

ஆனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. எரிபொருள் லாரியின் ஓட்டுநர் உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

விபத்து குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

பேருந்து மத்திய மாநிலமான ஹிடால்கோவில் இருந்து புறப்பட்டு மான்டேரிக்கு சென்று கொண்டிருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!