உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக அமெரிக்காவிடமிருந்து மேலும் 20 மில்லியன்டொலர் உதவி
Prathees
3 years ago
இந்த நாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருள் தேவைகளுக்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மனிதாபிமான உதவியாக வழங்கப்படும் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க பிரதிநிதி , சமந்தா பவர்,வரும் பருவத்தில் இந்த நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் மற்றும் பிற விவசாய உள்ளீடுகளை வாங்குவதற்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வளர்ச்சி உதவியாக வழங்க ஒப்புக்கொண்டார்.
நாட்டில் உள்ள விளைநிலங்களை ஆய்வு செய்த பின்னர், அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர் தனது ட்விட்டர் கணக்கில் ஒரு குறிப்பில் இதனை அறிவித்துள்ளார்.