அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு முன்னணி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கூட்டமைப்பு முட்டுக்கட்டை .கஜேந்திரன்

Mayoorikka
2 years ago
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு முன்னணி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கூட்டமைப்பு முட்டுக்கட்டை .கஜேந்திரன்

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சுமந்திரன் எம்.பி உட்பட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முட்டுக்கட்டையாக உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மகசின் சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும், சுமந்திரன் எம்.பியை கொல்ல முயன்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் கீழும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று நேரில் சந்தித்தனர்.

அதன்பின்னர்;, மகசின் சிறைச்சாலை முன்றலில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர்

செல்வராசா கஜேந்திரன், சுமந்திரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது காட்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துப் பேசிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் குழுவில், சட்டத்தரணி நடராஜர் காண்டீபனும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!