அரசியல்வாதிகளின் வீடுகளை தாக்கிய மேலும் நான்கு சந்தேகநபர்கள் கைது!

Prathees
2 years ago
அரசியல்வாதிகளின் வீடுகளை தாக்கிய மேலும் நான்கு சந்தேகநபர்கள் கைது!

மே 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் மீது தாக்குதல் நடத்திய மேலும் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொகரெல்ல, ஹிரியால பிரதேசத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் யூ கே சுமித் உடுகும்புரவின் வீட்டை தாக்கி தீ வைத்த சம்பவம் தொடர்பில் மல்சிறிபுர பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 26 வயதுடையவர்.

இதேவேளை, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இருவரின் வீடுகள், சொத்துக்கள் மற்றும் வாகனங்களுக்கு சேதம் விளைவித்த வழக்குகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் எடரமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 21 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது பண்டாரவளை மேயரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். பண்டாரவளையைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!