மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்தார் சமந்தா பவர்
Prathees
2 years ago

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவி (USAID) திட்டத்தின் நிர்வாக அதிகாரியான திருமதி சமந்தா பவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.
ஒரு தூதுக்குழுவாக அவருடன் 04 பேரும் வந்திருந்தனர்.
தோஹாவில் இருந்து கட்டார் ஏர்வேஸ் விமானம் KR-664 மூலம் காலை 09.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்களை வரவேற்பதற்காக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமந்தா பவர் உள்ளிட்ட அமெரிக்க தூதுக்குழுவினர் இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு எதிர்வரும் 12ஆம் திகதி புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



