கொழும்பில் உணவு நெருக்கடி மோசமடைந்துள்ளது...

Prathees
2 years ago
கொழும்பில் உணவு நெருக்கடி மோசமடைந்துள்ளது...

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் உணவுப் பணவீக்கம் (உணவு விலை அதிகரிப்பு) எண்பது வீதமாக உயர்ந்துள்ளதாகக் காட்டுகிறது.

2022 மே மாதத்தில் 58 சதவீதமாக இருந்த நாட்டின் உணவுப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 75.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் இந்த குறியீடு குறிப்பிடுகிறது.

இதேவேளை, இலங்கையில் சுமார் 57 இலட்சம் மக்கள் போதிய உணவின்றி உள்ளதாக உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கை மக்கள் கடந்த 70 வருடங்களில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொருளாதாரச் சிரமங்களினால் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் மிகவும் சிரமமான நிலைமைகளை எதிர்நோக்கும் பல குடும்பங்கள் பற்றிய ஊடகச் செய்திகள் இந்த நாட்களில் வெளியாகி வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!