எஞ்சிய காலம் முழுவதும் தேசத்தின் அரசியலமைப்புக் கொள்கைகளை நிலைநிறுத்த உறுதியளிக்கிறேன்: புதிய மன்னர் சார்ல்ஸ்

Mayoorikka
2 years ago
எஞ்சிய காலம் முழுவதும்  தேசத்தின் அரசியலமைப்புக் கொள்கைகளை நிலைநிறுத்த உறுதியளிக்கிறேன்: புதிய மன்னர் சார்ல்ஸ்

மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு உலகிற்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை அறிவேன் என பிரித்தானியாவின் புதிய மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.

மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு உலகிற்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை நான் அறிவேன். மகாராணி எலிசபெத்தை இழந்து தவிக்கும் மக்களின் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன். மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர் என பிரித்தானியாவின் புதிய மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக நியமிக்கப்பட்ட சார்ல்ஸ், முதன்முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார்.

மேலும் தான் நாட்டு மக்களுக்கு மதம் கடந்து சேவையாற்ற கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்த புதிய மன்னர், அன்பு, விசுவாசம், மரியாதையோடு தன் வாழ்நாள் முழுதும் மக்களுக்காக சேவை ஆற்றுவதாகவும் தெரிவித்தார்.

‘என் அன்புக்குரிய தாய் – எனக்கும் எனது குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு உத்வேகமாகவும் முன்மாதிரியாகவும் இருந்தார். மேலும் எந்தவொரு குடும்பமும் தங்கள் தாய்க்கு செலுத்த வேண்டிய இதயபூர்வமான கடனை செலுத்த நாங்கள் அவருக்குக் கடமைப்பட்டுள்ளோம்’ என்று சார்ல்ஸ் தெரிவித்தார்.

மகாராணி அசைக்க முடியாத பக்தியுடன் செயற்பட்டமையை போன்று நானும் இப்போது கடவுள் எனக்குக் கொடுக்கும் எஞ்சிய காலம் முழுவதும் நமது தேசத்தின் அரசியலமைப்புக் கொள்கைகளை நிலைநிறுத்த உறுதியளிக்கிறேன். என்று சார்ல்ஸ் குறிப்பிட்டார்.

இதேவேளை தனது மூத்த மகன் வில்லியமை இங்கிலாந்தின் புதிய இளவரசராக நியமித்துள்ளதாகவும் சார்ல்ஸ் அறிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!