இன்றைய வேத வசனம் 09.09.2022: எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 09.09.2022: எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்

எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் - 1 தெசலோனிக்கேயர் 4:17

எனது தாயாரின் அஞ்சலி செய்தியை எழுதுகையில், “மரித்தார்” என்ற வார்த்தை ஏதோ இறுதியானதாய் எனக்குத் தோன்றவே அதனை மாற்றி “இயேசுவின் கரங்களுக்குள் அழைக்கப்பட்டார்” என்றெழுதினேன். என் தாயாரில்லாத குடும்ப புகைப்படங்கள் சிலவற்றைப் பார்த்து சிலநேரம் வருந்தினேன்.

சமீபத்தில், மரித்தவர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களைத் தத்ரூபமாய் வரையும் ஒரு ஓவியரைக் கண்டேன். புகைப்படங்களின் உதவியால் குடும்ப படத்தில் மரித்த நபர்களை இணைப்பதில் அவர் வல்லவர்.

எனதருகே என் தாயார் இருந்த அவ்வோவியத்தை கண்ணீர் மல்க ரசித்தேன். அவருடைய அந்தக் கலை, தேவன் வாக்களித்த பரலோக இணைப்பை எனக்கு நினைவூட்டியது. 

இயேசுவின் விசுவாசிகள் “மற்றவர்களைப்போலத் துக்கிக்க” தேவையில்லை என்று உறுதியளிக்கிறார் (1 தெசலோனிக்கேயர் 4:13). “இயேசுவானவர் மரித்த பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்”(வ.14). பவுல், இயேசுவின் இரண்டாம் வருகையையும், இயேசுவோடு விசுவாசிகள் ஒன்று சேர்க்கப்பட்டு இணைவதையும் அறிவிக்கிறார் (வ.17).

இயேசுவை நம்பி மரித்த நம் அன்பானவர்கள் மரிக்கையில், பரலோகில் ஒன்றிணைவோமேன்பது தேவனின் வாக்குத்தத்தமாகும்.

நாம் மரிக்குமட்டுமோ அல்லது இயேசு வருமட்டுமோ, உயிர்த்த நமது ராஜாவுடன் வாழப்போகும் வாக்கு பண்ணப்பட்ட எதிர்காலத்தைக் குறித்த உறுதியான நிச்சயத்தோடு, நமது மரணத்தையும் எதிர்கொள்வோம்.