சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் – இந்திய நிதி அமைச்சர் சந்திப்பு
Mayoorikka
2 years ago

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்துள்ளார்.
பூகோள அரசியல் சூழ்நிலை காரணமாக உலக பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்மறையான விளைவுகள் தொடர்பில் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உணவு, எரிசக்தி விலைகள், சர்வதேச கடன் அதிகரிப்பு, உலகளாவிய பணவீக்க அதிகரிப்பு என்பன குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை அதிகளவில் பாதித்துள்ளமை தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரையும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சந்தித்துள்ளார்.



