சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுடன் வெளியிடப்படும்! – பிரதமர்
Mayoorikka
2 years ago

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிறைவேற்று அதிகார சபையின் அங்கீகாரத்தைப் பெற்றதன் பின்னர், ஊழியர் மட்டத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் அறிவிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று அதிகார சபையின் அனுமதி பெறப்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்
குறித்த அனுமதி கிடைத்ததன் பின்னரே இரு தரப்பினரினதும் இணக்கப்பாடு குறித்து அறிவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.



