தேசிய பிறப்புச் சான்றிதழை டிஜிட்டல் வடிவில் வழங்க ஆட்பதிவுத் திணைக்களம் திட்டம்
Prasu
2 years ago

2022 ஒகஸ்ட் 1ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்த குழந்தைகள் டிஜிட்டல் வடிவில் பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவார்கள் என பதிவாளர் ஜெனரல் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
குழந்தை 15 வயதை அடையும் போது, டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழில் அவர்களின் பெயருக்கு அடுத்ததாக பட்டியலிடப்பட்ட எண் அவர்களின் தேசிய அடையாள அட்டை எண்ணாக காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.



