பிரித்தானியாவில் மோசமான காலநிலை காரணமாக 1,000 பாடசாலைகள் மூடல்
#School
#Climate
#England
#Snow
#closed
Prasu
1 day ago
பிரித்தானியாவின் பல பகுதிகளில் நிலவும் கடும் வானிலை காரணமாக பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வேல்ஸில் மற்ற பகுதிகளை விட பாதிப்பு மிக அதிகமாக உள்ளதால் 380க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வடக்கு அயர்லாந்தில் சுமார் 186 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது.
மேலும் ஸ்காட்லாந்து பகுதியில் மட்டும் 150க்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாது இங்கிலாந்தின் முக்கிய பகுதிகளிலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் வானிலை ஆய்வு மையம் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் வழுக்கும் தன்மை அதிகமாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )