கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து மாணவன் மரணம்

Prathees
2 years ago
கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து   மாணவன் மரணம்

குருநாகல் பிரதேசத்தில் கழிவுநீர் வடிகாலில் சிக்கிய பாடசாலை மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கழிவு நீர் செல்லும் வாய்க்கால் அருகே பாடசாலை பையை பார்த்தபோது, ​​அந்த வழியாக சென்றவர்கள், மாணவன் வாய்க்காலில் சிக்கி கிடப்பதை பார்த்து, பின்னர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் குருநாகல் பொலிஸார் இராணுவத்தினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மாணவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் குருநாகல் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவனைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக முயற்சித்த போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாணவன்  பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது வீதியில் சென்ற வாகனத்திற்கு வழிவிட்டு வீதியின் ஓரமாக செல்லும்போது  தண்ணீர் செல்லும் கழிவு நீர் வாய்க்காலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!