வெளியானது 2022 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

Prasu
3 years ago
வெளியானது 2022 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளது.

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றது.

இப்பரிட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என முன்னதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் https://www.doenets.lk/examresults என்ற இணையத்தள பக்கத்தில் பார்வையிடலாம்.

இந்தமுறை வெளியாகியுள்ள பெறுபேறுகளுக்கு அமைய, 1 இலட்சத்து 71 ஆயிரத்து 497 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிப்பெறுள்ளனர்.

உயர்தரப்பரீட்சைக்கு 2 இலட்சத்து 72 ஆயிரத்து 682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில், 49 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4