பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது பாலியல் வன்கொடுமை: பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு

Prathees
2 years ago
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது பாலியல் வன்கொடுமை: பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு

பயிலுனர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை அடுத்து செவனகல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியை கைது செய்யுமாறு அம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவனகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பு பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமையகத்திற்கு செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி 3 நாட்களாக விடுமுறை எடுத்துள்ள நிலையில், இதுவரை பணிக்கு சமூகமளிக்கவில்லை.

 அம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்திற்குரிய நிலைய கட்டளைத் தளபதியை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!