IPL Eliminator - தொடரில் இருந்து வெளியேறிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

#Lanka4 #IPL #Cricket #hyderabad #Rajasthan #L4
Prasu
1 hour ago
IPL Eliminator - தொடரில் இருந்து வெளியேறிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

19வது ஐ.பி.எல் தொடரின், வெளியேற்றுதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அந்தவகையில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்கள் குவித்தது.

ராஜஸ்தான் அணி சார்பில் அதிரடியாக விளையாடிய, வைபவ் சூர்யவன்ஷி 93 ஓட்டங்களும் துருவ் ஜுரேல் 50 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில், இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி 19.2 ஓவர்களில் 196 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

ஐதராபாத் அணி சார்பில், நிதிஸ் குமார் ரெட்டி 38 ஓட்டங்களும் சலீல் அரோரா 35 ஓட்டங்களும் இஷான் கிஷன் 33 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்த தோல்வியின் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!