முற்றுப்பெறும் வரிசையுகம் - எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய செயலி

Kanimoli
3 years ago
முற்றுப்பெறும் வரிசையுகம் - எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய செயலி

நாட்டில் எரிபொருள் கிடைக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பான சகல தகவல்களை அறிந்து கொள்வதற்கு புதிய செயலியை (App) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த செயலி மூலம் நாட்டில் எரிபொருள் கிடைக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்றும் விரைவில் இந்த செயலி பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்களை இந்த செயலியின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

குறித்த செயன் முறையின் மூலம் மக்கள் வரிசைகளில் நிற்பதை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும், இலகுவாக எரிபொருள் நிலையங்களை கண்காணித்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது. 

கியூ.ஆர் குறியீடு முறையின் கீழ் குறித்த ஒரு பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஏனைய பகுதியில் அமைந்துள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கான வாய்ப்பை இந்த செயலியின் ஊடாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன் மூலம் நுகர்வோர் எரிபொருளை பெற்றுகொள்ள முடியும்.

மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளும் போது அந்த பகுதிகளில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகம் குறிப்பிட்டார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4