மின் கட்டண திருத்தத்தில் சமூக நீதிக் கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
Prathees
2 years ago

மின்சாரக் கட்டண திருத்தத்தில் சமூக நீதிக் கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறைந்த மின்சார அலகுகளை பயன்படுத்தும் வீட்டு மின்சார நுகர்வோர் மீது அதிக சுமையை ஏற்றி புதிய விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தை செலுத்த முடியாத மக்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும் அல்லது அதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமகி ஜனபலவேகவின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை 75 சதவீதம் உயர்த்துவதற்கு இலங்கை மின்சார ஆணையத்திற்கு (CEB) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



