கேமரூனில் போகோஹரம் தீவிரவாதிகள் தாக்குதல் - ராணுவ வீரர் உட்பட 5 நபர்கள் உயிரிழப்பு

Prasu
2 years ago
கேமரூனில் போகோஹரம் தீவிரவாதிகள் தாக்குதல் - ராணுவ வீரர் உட்பட 5 நபர்கள் உயிரிழப்பு

கேமரூனில், போகோஹரம் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியா, மாலி, நைகர், சாட் மற்றும் கேமரூன் போன்ற நாடுகளை இணைத்து முஸ்லிம் மத அடிப்படையில் அரசாங்கத்தை உருவாக்கக்கூடிய எண்ணத்தோடு போகோஹரம் என்ற தீவிரவாத அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு படையினர், இந்த தீவிரவாத இயக்கத்தை அழிப்பதற்காக அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் இந்த தீவிரவாத இயக்கம், பாதுகாப்பு படை வீரர்களையும், மக்களையும் குறி வைத்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கிஸ்மடரி என்னும் கிராமத்தில் இந்த தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் இராணுவத்தினர் உட்பட ஐந்து நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் அதிகமாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!