முரட்டுத்தனமான முடிவை எடுத்திருந்தால் நான் இன்று ஜனாதிபதியாகியிருப்பேன்: சஜித்
Prathees
2 years ago

ஒழுக்கத்தையும் ஜனநாயகத்தையும் மறந்து முரட்டுத்தனமான தீர்மானங்களை எடுத்திருந்தால் இன்று இந்த நாட்டின் ஜனாதிபதியாகியிருக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தாம் நெறிமுறையற்ற ஜனாதிபதியாக இருக்கமாட்டேன் என்றும், மக்களின் விருப்பமின்றி எந்தப் பதவியையும் எடுக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
அரநாயக்கவில் நடைபெற்ற சமகி ஜனபலவேகக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனத் தெரிவித்த அவர், அமைச்சுப் பதவிகளை வகிக்காமல் நாடாளுமன்றக் குழு அமைப்பின் ஊடாக கைகோர்த்து நாட்டைக் கட்டியெழுப்பத் தயார் எனவும் தெரிவித்தார்.



