எரிவாயு சிலிண்டர்களை திருடிய 6 பேர் கைது!

Prabha Praneetha
2 years ago
எரிவாயு சிலிண்டர்களை திருடிய 6 பேர் கைது!

ஓட்டுமடம் பகுதியில் உள்ள லஃவ் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சிய சாலையை உடைத்து 52 வெற்றுச் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் முதன்மை சந்தேக நபர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த சில நாள்களுக்கு முன்னர், ஓட்டுமடம் பகுதியில் உள்ள லஃவ் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சிய சாலையை உடைத்து 7 இலட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான 52 வெற்றுச் சிலிண்டர்கள் திருட்டுப் போயிருந்தன.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!