எரிபொருள் பெறுவதற்கான இரண்டாவது ´கோட்டா´ நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டது!
Mayoorikka
2 years ago

QR முறையின் கீழ் எரிபொருள் பெறுவதற்கான இரண்டாவது ´கோட்டா´ நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் .
மேலும் QR முறமை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நள்ளிரவில் புதுப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி, கடந்த வாரம் எரிபொருள் வழங்கப்பட்டதை போன்று மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்கப்படும்.
இதேவேளை போதியளவு எரிபொருள் இருப்பதனால் வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அமைச்சர் அறிவுறித்தியுள்ளார்.



