படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஏன் கூறினார் என்பது தொடர்பில் ஆராய்கின்றோம் - பந்துல குணவர்த்தன

Kanimoli
2 years ago
படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஏன் கூறினார் என்பது தொடர்பில் ஆராய்கின்றோம் - பந்துல குணவர்த்தன

இலங்கை பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள தருணத்தில், இலங்கைப் படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஏன் கூறினார் என்பது தொடர்பில் ஆராய்கின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள 58 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 47 உறுப்பு நாடுகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்  கோரிக்கை விடுத்திருந்தார்

இது தொடர்பில் செய்தியாளர் ஒருவர் பந்துல குணவர்த்தனவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், இது தொடர்பில் சிறிலங்காவின் அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சரவை மட்டத்தில் ஆராயப்படும். அதன்பின்னரே இலங்கை அரசின் உத்தியோகபூர்வ பதிலை வெளியிடுவோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!