ரணிலைச் சந்திக்க பஸ்ஸில் சென்ற சஜித்
Kanimoli
2 years ago

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இன்று மாலை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் இக்கலந்துரையாடலில் கலந்துள்ள சஜித் பிரேமதாச தன் கூட்டணி எம்பிக்களுடன் பஸ்ஸில் பயணம் செய்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால் மக்கள் கடும் அவதிபட்டு வருகின்றனர். இந்நிலையில் எதிர்கட்சித் தலைவர், தனது பிரத்யேக வாகனத்தில் செல்லாது பஸ்ஸில் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.



