புதையல் தோண்ட முற்பட்ட நான்கு பேர் கைது! (வீடியோ இணைப்பு)

#SriLanka #Kilinochchi
Mayoorikka
1 hour ago
புதையல் தோண்ட முற்பட்ட நான்கு பேர் கைது! (வீடியோ இணைப்பு)

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி ஏ-09 சாலையில் அமைந்துள்ள மின்சார வாரியத்திற்குச் சொந்தமான சுற்றுலா இல்லத்தில் சிறப்பு அதிரடிப்படை அதுகோரல உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் இன்று 12.45 மணியளவில் மின்சார வாரியத்தின் பணிபுரியும் 04 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அனுமதியின்றி அரசாங்க நிலத்தை சுரண்டுதல் மற்றும் சுரங்கம் தோண்டுதல் போன்ற குற்றத்திற்காக சிறப்பு அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த சந்தேக நபர்கள் மற்றும் தடையப் பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

 மேலும் குறித்த சந்தேக நபர்கள் 12.01.2026 அன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!