உந்துருளியில் பயணித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை
Kanimoli
2 years ago

வத்தளை எடம்பொலவத்த வீதியில் நேற்றைய தினம் (04) உந்துருளில் பயணித்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
தனியார் நிறுவனமொன்றில் களஞ்சியசாலை உதவியாளரான பணி புரியும் 41 வயதுடைய வத்தளை எந்தல பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தமது வீட்டிலிருந்து வேலைத்தளத்திற்கு உந்துருளியில் செல்லும் போது இனந்தெரியாத நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.



