அமெரிக்க நாடாளுமன்ற மூத்த பெண் உறுப்பினர் ஜாக்கி வாலோர்ஸ்கி விபத்தில் உயிரிழப்பு

#America #Parliament #Death
Prasu
2 years ago
அமெரிக்க நாடாளுமன்ற மூத்த பெண் உறுப்பினர் ஜாக்கி வாலோர்ஸ்கி  விபத்தில் உயிரிழப்பு

அமெரிக்க நாடாளுமன்ற மூத்த பெண் உறுப்பினர் ஜாக்கி வாலோர்ஸ்கி ஆவார். இவருக்கு 58 வயதாகிறது. இந்தியானா என்ற பகுதியில் புதன்கிழமை அன்று  கார் விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த கார் விபத்தில் ஜாக்கி வாலோர்ஸ்கி மற்றும் அவரது அலுவலக ஊழியர்கள் இருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

அந்நாட்டின் நேரப்படி நேற்று காலமானார். இந்தியானா குடியரசுக் கட்சியின் பிரதிநிதியான ஜாக்கி வாலோர்ஸ்கியின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவர் தனது ஆழ்ந்த இரங்கலை மறைந்த ஜாக்கியின் கணவர் டீனுக்கு தெரிவித்துள்ளார். இவர் 2013 இல் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரானார். 

அதற்கு முன்பு இந்தியானா பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மேலும், அவர்  பத்திரிகையாளராகவும், மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்தார். 

இந்நிலையில் அவரது மறைவு  தங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!