நாட்டைவிட்டு வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய எதிர்வரும் 11ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தகவல்

Kanimoli
3 years ago
 நாட்டைவிட்டு வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய எதிர்வரும் 11ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தகவல்

  மக்கள் எதிர்ப்பால் நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு திரும்பும் கோட்டாபய, சிறிது காலத்தின் பின்னர் , மீண்டும் தீவிர அரசியலுக்குள் வருவதா, இல்லையா என்பது குறித்து அவரது நெருங்கிய தரப்புகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபயவுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை அந்நாட்டில் தங்கியிருக்க சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதன் பின்னர் அவர் இலங்கை திரும்புவார் என கூறப்படுகிறது .

அதேவேளை கோட்டாபய நாடு திரும்பியவுடன், மிரிஹானவில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்திற்குத் செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைவிட்டு வெளியேறிய கோட்டாபய ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த நிலையில் , மக்களுக்கு தாம் சேவையாற்ற எப்போதும் காத்திருப்பதாக தனது இராஜினாமா கடித்ததில் குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4