போராட்டக்காரர்கள் நுகேகொடையில் சனிக்கிழமை பொது பேரணி ஏற்பாடு

Kanimoli
3 years ago
போராட்டக்காரர்கள் நுகேகொடையில் சனிக்கிழமை பொது பேரணி ஏற்பாடு

காலி முகத்திடல் மக்கள் போராட்டத்தின் ஒரு கட்டமாக, போராட்டக்காரர்கள் நுகேகொடையில் சனிக்கிழமை (6) பொது பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.

அரசாங்க அடக்குமுறை, அவசரகால நிலை மற்றும் பல காரணங்களுக்கு எதிராக இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கை மையமாக வைத்து இந்த பேரணி நடைபெறவுள்ளது.

தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம், சிவில் அமைப்புகள் மற்றும் பல தரப்பினரும் இந்த பேரணியில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஏற்கனவே காலிமுகத்திடலில் இருந்து போராட்டக்காரர்களின், கூடாரங்களை நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் அகற்றுமாறு போலிஸ் தரப்பு உத்தரவிட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4