ஜனாதிபதியின் மாளிகைக்குள் நுழைந்து ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த 28 வயதுடைய இளைஞர் கைது

Prasu
3 years ago
ஜனாதிபதியின் மாளிகைக்குள் நுழைந்து ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த 28 வயதுடைய இளைஞர் கைது

கடந்த ஜூலை மாதம் 9ம் திகதி ஜனாதிபதியின் மாளிகைக்குள் நுழைந்து ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் தெரணியகலையில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 28 வயதுடைய சமன்புரகம பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4