ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறிய கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா

Prasu
3 years ago
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறிய கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்த கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது உரையில் இலங்கையை நவீன ஏற்றுமதியை அடிப்படையாக  கொண்ட போட்டித்தன்மை கொண்ட சமூக சந்தை பொருளாதாரமாக மாற்றுவது குறித்து தெரிவித்தார்.

நான் இதனை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன். இதுவே எனது நிலைப்பாடு.இதற்கு பாரிய சீர்திருத்தமும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளச்செய்வதும் அவசியம்.

நாங்கள் ஒன்றிணையவேண்டும்,பொதுவான திட்டமொன்றின் அடிப்படையில் புதிய இலங்கையை ஏற்படுத்துவதை நோக்கி  குறிப்பிட்ட காலத்திற்கு அனைவரும் அல்லது அனைத்துகட்சி அரசாங்கமாக நாங்கள் ஒன்றிணையவேண்டும் என ஹர்சா டி சில்வா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4