நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முக்கிய செலவை ஏற்பதாக கூறிய ரணில்

Kanimoli
3 years ago
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முக்கிய செலவை ஏற்பதாக கூறிய ரணில்

சிறிலங்காவின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் உத்தியோகப்பூர்வமாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறுகிறது.

 இந்த கூட்டத்தொடர் இன்று காலை 10 மணியளவில் ஆம்பமாகியது.

இந்த சிறப்பு நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட அதிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேநீர் விருந்துபசாரம் வழங்குவது நடைமுறை.

இதற்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.

எனினும் தேநீர் விருந்துபசாரத்துக்கான செலவை நாடாளுமன்றத்தின் மூலம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நிகழ்வு நாடாளுமன்றத்தின் மூலமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதற்கான செலவை நாடாளுமன்றமே பொறுப்பேற்கும் என நாடாளுமன்ற அதிகாரிகள் அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4